உதகை அப்பர் பஜார் நடைபாதை கழிவு நீர் கால்வாயாக மாறி உள்ளது…

நீலகிரி மாவட்டம் கல்வெட்டு அமைக்கும்போது ஒப்பந்ததாரர்கள் செய்த தவறினால் பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அவதிக்குள்ளான பகுதி மக்கள், உதகை அப்பர் பஜார் சாலையில் கழிவுநீர் நிரம்பி நடைபாதையில் வழிந்து ஓடுவதால் பகுதி மக்கள் நடைபாதை பயன்படுத்த முடியாமல் தவிப்பு, மனித கழிவு நீரினால் துர்நாற்றம் வீசுவதோடு நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாய் உள்ளனர், நோய் பருவம் அபாயத்தில் அப்பகுதி மக்கள் சிக்கி உள்ளனர்,
சில மாதங்களுக்கு முன்பாக மழை நீரோட்டம் சீரமைக்கப்படுவதாக அந்த சாலையில் கல்வெட்டு அமைத்து சிறிய பாலம் போல் அமைக்கப்பட்டது அப்பொழுது அங்கு கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அதன் மீது கல்வெட்டு அமைக்கப்பட்டதாக பகுதி மக்கள் கூறுகின்றன , இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுபோன்ற சமயங்களில் கழிவு நீர் ஓட்டத்தை திசை திருப்பி மழைநீர் கால்வாய் அமைந்திருக்கும் மெயின் பஜாரின் ஒரு பகுதியில் விடப்படுகிறது பின்பு எதிர்ப்புகள் அதிகமாகும் போது மீண்டும் அப்பர் பஜார் சாலைக்கு கழிவு நீர் திருப்பப்படுகின்றது இதனால் சாலையில் நீரோட்டம் நிக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றது . அப்பகுதியில் அரசு பள்ளிகள் மற்றும் வியாபார கடைகள் என முக்கியமான சாலையாக உள்ளதால் பாதிக்கப்படுவது அப்பகுதி மக்கள் மட்டுமல்ல அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன என்றனர், உதகை நகராட்சி உடனடியாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி வாழும் மக்கள் வேண்டுகோள், தவறுகளை நியாயப்படுத்துவதை விட சீரமைத்து தருவது சிறந்தது. பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் தன் கவனத்தை இந்த விஷயத்தில் செலுத்தி கழிவுநீர் ஓட்டத்தை சீரமைத்து தந்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம்??