உதகை; கூடலூர், சேரம்பாடி,பந்தலூர் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானையால் மக்கள் அச்சம். யானையை துரத்த வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு.

உதகை; கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில
நாட்களாக ஒரு ஆண் காட்டுயானை பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தொடர்ந்து
நடமாடி வருகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனநிலத்தை ஒட்டியுள்ள தங்களது
விவசாய நிலங்களில் வாழை, பாக்கு, தென்னை, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர் / மர
வகைகளைத் தொடர்ந்து பயிரிட்டு வருவதால் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித
விலங்கு மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கூடலூர் வனத்துறை இந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கீழ்காணும் சிறப்பு நடவடிக்கைகளை இரவு பகலாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, கூடலூர் வனக்கோட்டத்தைச் சார்ந்த அனைத்து முன்களப் பணியாளர்களும், அதிவிரைவுப் படையினர் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் என சுமார் 75 பணியாளர்கள் 24 மணி நேரமும் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர், இக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் ஒரு குழு சேரம்பாடி பகுதியில் முகாமிட்டு கண்காணிப் பினை தொடர்ந்து துரிதப்படுத்தி வருகிறது ட்ரோன் மூலம் யானை நடமாட்டம் கண் காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, கூடலூர் வனக்கோட்டத்திற்கு இதர கோட்டத்திலிருந்து முன் களப்பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த யானையினை கட்டுப்படுத்த முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து கிருஷ்ணா மற்றும் ஸ்ரீனிவாசன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, யானையை வனத்திற்குள் அனுப்பும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது, இந்நிகழ்வினை கண்காணிப் பதற்கும் அதற்கு தீர்வு காண்பதற்கும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) மற்றும் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு குழுவினை கூடலூருக்கு அனுப்பி வைக்க வனத்துறை தலைமையிடம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு தொடர் நடவடிக் கைகளை களப்பணியாளர்களுக்கு தீவிரமாக கண்காணித்து, உரிய வழிகாட்டி இப்பிரச்சி னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
8. வனத்துறை தலைமையிடத்திலிருந்து இந்நிகழ்வு தொடர்பாக தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை எந்நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காகவும், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் திரும்ப அனுப்புவதற்கும் இரவு பகலாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான அனைத்து பணிகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற
உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள், சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வனத்துறைக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) நா.வெங்கடேஷ் பிரபு இ.வ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.