நேற்று, லாக்ஹீட் மார்ட்டின் என்ற பாதுகாப்பு நிறுவனம் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் DARPA ( Defence Advanced Research Projects Agency) என்ற பாதுகாப்பு திட்ட முகமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்ட்ஸ் ஏவுகணைத் தளத்தில் தரையிலிருந்து ஏவப்பட்ட சோதனை நடத்தப்பட்டதாக DARPA தெரிவித்துள்ளது. அமெரிக்க விமானப்படை ஜூலை 12ம் தேதி அன்று ஒரு தனி சோதனையில், கலிபோர்னியா கடற்கரையில், ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை ஏவியது. இது Air Launched Rapid Response Weapon (ARRW) என்று அழைக்கப்படுகிறது.
ஏவுகணை சோதனைகள் பற்றிய அறிவிப்பு, தோல்வியுற்ற முயற்சிகள் மற்றும் செலவுகள் பற்றி கவலையடைந்த அமெரிக்கா, சிறந்த ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்க திணறியது குறிப்பிடத்தக்கது.
ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது மணிக்கு 6,200 கி.மீ. (3,853 மைல்கள்) வேகத்தில் மேல் வளிமண்டலத்தில் பயணிக்ககூடியது. ஹைப்பர்சோனிக் ஆயுதம் அதன் இலக்கை நோக்கி ஏவப்படுவதற்கு முன்பு விமானத்தின் இறக்கையின் கீழ் பறக்கவிடப்படுகிறது. முன்பு நடத்தப்பட்ட சோதனைகளில், ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பிரிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
DARPA இந்த திட்டத்திற்காக $45 மில்லியன் கோரியுள்ளது.லாக்ஹீட் மார்ட்டின்ஸ் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுத அமைப்புகளைப் போலவே ஹைபர்சோனிக் ஆயுதங்களான DARPAவை ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம் (ஹிமார்ஸ்) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.