உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள மாவட்ட சிறையில் 26 கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில், இரண்டு கைதிகள் லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையில் உள்ளனர் என்று ஜெயிலர் ஒருவர் தெரிவித்தார். கைதிகள் அனைவருக்கும் எச்.ஐ.வி., பரிசோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.