துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாடே சிதைந்து சின்னாபின்னமான நிலையில் பலி எண்ணிக்கை பலஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் இந்த பெரும் அழிவிலிருந்து மீள்வதற்குள் அடுத்து ஒரு பேரழிவு அந்நாட்டை சீர்குலைய வைத்துள்ளது.
துருக்கியில் கொட்டி தீர்த்த கனமழையால் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. மேலும் சான்லியுர்பா மற்றும் அதியமான் மகாணங்களில் பெய்து வரும் அதிக கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் நிலநடுக்கத்தால் வீடுகளில் இழந்த மக்கள் தற்போது கூடாரங்களிலும், கண்டைனர்களிலும் வசித்து வரும் நிலையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிதும் பாதித்துள்ளனர். இந்நிலையில் கொட்டி தீர்த்த கனமழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.