வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல – ரஷ்யாவிடம் இருந்து வாங்கி குவிக்கும் இந்தியா..!

ரஷ்யாவிடம் கடந்த சில மாதங்களாக அதிக அளவு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணையை வாங்கி குவித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை வாங்கி குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததோடு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை வாங்க மாட்டோம் என்றும் முடிவெடுத்தன.

இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணையை மலிவு விலையில் வழங்கிவரும் நிலையில் இந்தியா அந்த கச்சா எண்ணையை அளவுக்கு அதிகமாக வாங்கி குவித்து வருவதாகவும் தனது தேவையின் 85% கச்சா எண்ணையை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் வரலாற்று உச்சமாக 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்திருப்பதாகவும் இது வரலாற்று உச்சம் என்றும் கூறப்படுகிறது.