கோவை தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன், பலமுறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொப்பரை கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும், கொள்முதல் காலத்தை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநில அரசு அதற்கு செவி சாய்த்ததா? என்று தெரியவில்லை. ஆனால் மத்திய அரசு தற்போது விவசாயிகள் நலனுக்காக செவி சாய்த்து உள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சில அண்டை மாவட்டங்களில் தென்னை சாகுபடி முக்கிய விவசாய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
மேலும் விவசாயிகளின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும் என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்தார். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்ததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் கொப்பரைக்கு குறைந்த விலையை நிர்ணயித்ததால், விவசாயிகள் அந்த விலைக்கு மேல் வெளிச்சந்தையில் விற்க முடியவில்லை. மேலும் அவர்கள் அரசாங்கத்தின் கொள்முதலையே முழுமையாக நம்பியிருக்கிறார்கள் என்றார்.
எனவே அரசாங்கம் கொள்முதல் செய்யும் குறைந்தபட்ச ஆதரவு விலகி ரூபாய் 150 அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தற்போது கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர் வானதி சீனிவாசன் சந்தித்து விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்துக் கூறினார். பிறகு மத்திய அமைச்சர் கூறுகையில், கொப்பரை கொள்முதலை மீண்டும் 2 மாத காலத்திற்கு செய்ய உத்தரவிடுவதாக கூறினார். கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தார். தென்னை நார் ஏற்றுமதி மற்றும் விலை உயர்விற்கு உதவி செய்ய மத்திய அரசின் சார்பில் குழு ஒன்றை அனுப்பி வைத்து உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். மத்திய அரசின் இத்தகைய உடனடி நடவடிக்கைகளை கண்டு, இனி விவசாயிகளுக்கு மோடி தலைமையிலான அரசு நிச்சயம் உதவி செய்யும் என்பதற்கான உறுதியையும் அவர் அளித்துள்ளார்.