கோவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கடந்த இரண்டு தினங்களாக கோவையில் நடந்த அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும்,தொழில் முனைவோர் சந்திப்பு, பாஜக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் என தொடர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு டெல்லிக்கு செல்லும், தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார், இதில் நேற்று நடந்த தொழில் முனைவோர் எம்எஸ்எம்ஈ யினருடன் கலந்துரையாடலில் கேள்வி எழுப்பிய, அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி பற்றிய கருத்துக்கு, பதில் அளித்த அமைச்சர் ஜனரஞ்சமாக அவரது பாணியில் அவர் பேசியிருக்கிறார் அதில் தப்பில்லை என்றும் எந்த பொருளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து மாநில பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைச்சர்களின் குழுவும் தீவிர ஆய்வு செய்கிறது. ஜிஎஸ்டி சம்பந்தமான முடிவுகள் எதுவும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்படுவது இல்லை என்றார்
மேலும் தமிழகத்திலிருந்து அதிக ஜிஎஸ்டி பெறப்படுவதாகவும் அதன் நிதியை மத்திய அரசு குறைந்த அளவே தமிழகத்திற்கு திருப்பித் தருவதாக எழும் விமர்சனத்திற்கு , தமிழகத்தை ஆளும் நபர்களே இத்தகைய புரியாமையை வெளிப்படுத்துவது தனக்கு பயமாக இருப்பதாகவும் பெறப்படும் வரியில் 50% மத்திய அரசிற்கும் 50% மாநில அரசிற்கும் செல்வதாகவும் கூறியவர், மத்திய அரசிற்கு வரும் 50 சதவீதத்திலும் 41% மாநில அரசுக்கு திருப்பி செல்வதாகவும் . பெறப்பட்ட வரியை மாநில அரசுகளுக்கு கொடுப்பதை வரையறுப்பது நிதி ஆணையம் என்றும் நிதி ஆணையம் சொல்வதை கொடுக்க வேண்டிய கடமை தன்னிடம் உள்ளது. அதைக் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் தனக்கு இல்லை என்றும் கூறினார். நாங்கள் நிறைய கொடுக்கிறோம் எங்களுக்கு நிறைய வேண்டும் என்றால் நிதி ஆணையத்திடம் முறையிடுங்கள் என்றும் அவர் கூறினார்.
வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாத போது அபராதம் விதிக்கப்படுவது எழுப்ப பட்ட கேள்விக்கு, இது தவறான செய்தி என்றும் ஏழைகள் பயன்படுத்தும் ஜன் தன் அக்கவுண்ட், கரண்ட் அக்கவுண்ட், சேவிங் அக்கவுண்ட் இவை எதற்கும் அபராதம் கிடையாது என்றும் இத்தகைய அக்கவுண்டுகள் மீது வங்கிகள் அபராதம் விதித்தால் அது தவறு என்றும் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விஷ்வகர்மாவிற்கும் ஜாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 18 தொழில்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் யாராக இருந்தாலும் அட்டவணையில் உள்ள தொழில்களை செய்பவர்களுக்கான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், திராவிட அரசியல் செய்பவர்கள், ஜாதிக்கு எதிரானவர்கள் என்றார் தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலக்கப்பட்டதை இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என கேள்வியும் எழுப்பினார். ஹிந்தி ஒழிப்பு என்று வாய் பேசுபவர்கள் அவர்களது வீட்டைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறதே ஏன் என்றார்.
மிசோரத்தில் நடைபெற்ற பெரும் கலவரத்தில் ராணுவத்தை அனுப்பி நம் மக்களையே கொலை செய்தது காங்கிரஸ் கட்சி என்றும் இதற்கு முன்பு மணிப்பூரில் நடந்த கலவர காலத்தில் எத்தனை மத்திய அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். தற்போது இருக்கும் உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு மூன்று நாட்கள் அங்கேயே இருந்து அனைத்து தரப்பினரையும் சந்தித்தார் , இதே போல மிசோரம் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி கேளுங்க என்றார்.
சென்னை மெட்ரோவில் மத்திய அரசின் பங்களிப்பு குறித்து விளக்கிய நிதி அமைச்சர், சென்னை மெட்ரோவிற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது முற்றிலும் தவறான பேசு வேண்டாம்.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, நம் நாட்டிற்கு விரோதமாக செயல்பட்ட நபர்களை சந்தித்து பேசியிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.இந்த திமுக கட்சி, தோழமைக் கட்சியினர் கேட்கனும், நாட்டுக்கு விரோதமாக இருந்த நபருடன் சந்தித்து பேசியதை குறித்து கேள்வி கேட்க மாட்டீர்களா என்றார்.
அமெரிக்காவில் ராகுல் காந்தி வெளிப்படுத்தும் கருத்துக்களை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என்றும் இதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கமா என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தவரும், பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த செய்தி கேட்டு அவரதுமறைவிற்கு தனது வருத்தத்தை இரங்கலை தெரிவித்தார்.