கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ ராஜசேகர் (வயது 29). அவர் போட்டோ ஸ்டியோ வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு செட்டிப்பாளையத்தை அடுத்த ஒக்கிலிப்பாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது.
சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள். இதுகுறித்து ஸ்ரீ ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தியது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0