சூலூர் பேரூராட்சிக்குப் பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் திருமண மண்டபங்கள் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தக்கூடிய வாழை இலை, பாக்கு மட்டை , இளநீர் மட்டைகள் இது போன்ற கழிவுகள் முழுமையாக அப்படியே கொட்டும் பொழுது அவை மக்கும் கால அளவும் அதிகரிக்கிறது. அதனை சேகரிக்கவும் அதிக அளவில் இடங்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு பேரூராட்சி மூலம் அரவை இயந்திரம் 15 வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் அதி நவீன அதிக பழுதிறன் கொண்ட அறவை இயந்திரம் வாங்கப்பட்டு சூலூர் வளம் மீட்பு பூங்காவில் பொருத்தப்பட்டிருக்கிறது அதனுடைய இயக்கத்தினை சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, தலைமை எழுத்தர் கோவிந்தராஜன், ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்வில் துப்புரவு மேற்பார்வையாளர் கோகுல் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை அரைத்து எடுப்பது இயந்திரத்தில் பணியாற்றும் பொழுது பாதுகாப்பினையும் பணியாளர்களுக்கு செயல் அலுவலர் எடுத்துக் கூறினார். அவர் கூறுகையில் இந்த இயந்திரத்தின் மூலம் இடம் மிச்சமாவது உடன் கழிவுகளை விரைவாக மக்குவதற்கு ஏற்ற வகையில் தரம் பிரித்து அரைத்து அவற்றை பதப்படுத்தி உரமாக்குவதற்கு எளிதாக இருக்கும் அதிக திறன் கொண்ட இயந்திரமாக இருப்பதால் பணியின் கால அளவையும் மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0