ஐநா சபையின் பொதுச் செயலாளர் இந்தியாவிற்கு வருகிறார்.
ஐநா சபையின் பொதுச் செயலாளராக அப்துல்லா சாகித் இருக்கிறார்.
இவர் மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஆவார். இவர் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகிறார். அதன்படி இன்றும், நாளையும் அப்துல்லா ஷாகித் இந்தியாவில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இந்த வருகையின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் உள்பட பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அப்துல்லா சாகித்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் அப்துல்லா சாகித் 3 உறுப்பினர்களுடன் இந்தியாவிற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.