இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்த கூட்டத்தில் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா பங்கேற்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் 14 உறுப்பினர்கள் முன்னிலையில் இருந்தபோது, 10 உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தனர். இதற்கிடையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் மீது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாவிட்டால் வாஷிங்டனுக்கான தூதுக்குழு கலைக்கப்படும் என இஸ்ரேலின் ராணுவ வானொலி அறிவித்துள்ளது. காசாவில் ஏறக்குறைய ஆறு மாத கால போர்நிறுத்தத்தை அமெரிக்கா எதிர்க்கிறது. ஒக்டோபர் 7-ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை முன்னிறுத்தி இஸ்ரேல் தனது நட்பு நாடான அமெரிக்காவின் உதவியுடன் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அக்டோபர் 7-ஆம் திகதி நடந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் 32,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகளில் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது. ரமலான் காலத்தில் போர்நிறுத்தம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுக்கும் வகையில் அமெரிக்கா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கோரியது. அக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் 253 பணயக்கைதிகளை வைத்திருந்ததாக இஸ்ரேல் கூறியது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0