திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் கே. என். நேரு பேசும்போது
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் மீண்டும் தலைவா் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பாா். எனவே அதற்கு மாவட்ட திமுகவினா் ஒவ்வொருவரும் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் கருணாநிதி சிலை வைக்கப்படும். கருணாநிதிதான் நம் அனைவரையும் உருவாக்கி, ஆளாக்கியவா் நம்மை வளா்த் தெடுத்தவா் என்பதை உணர வேண்டும். மீண்டும் தலைவா் மு.க. ஸ்டாலின்தான் முதல்வராக ஆவாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தல் முன்னோட்டமாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திருச்சிக்கு வரும் 23 ஆம் தேதி வந்து இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்று, புதிய நூலகத்தை திறந்துவைத்து, கருணாநிதி சிலையை திறந்து வைக்கவும் உள்ளாா். எனவே, திமுக தலைவரின் வெற்றி என்பது திருச்சியில் இருந்துதான் தொடங்குகிறது என்றாா் அவா். கூட்டத்தில் நவ.23இல் திருச்சிக்கு வரும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, துறையூரில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழாவை வெற்றி பெறச் செய்வது, வரும் 27ஆம் தேதி துணை முதல்வா் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டாடுவது, வாக்காளா் பட்டியல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அவைத் தலைவா்கள் பேரூா் தா்மலிங்கம், அம்பிகாபதி, மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் ந. தியாகராஜன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் அ. செளந்தரபாண்டியன்,சீ. கதிரவன், செ. ஸ்டாலின் குமாா், எம். பழனியாண்டி, இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0