கோவை தெற்கு புதிய போலீஸ் துணை கமிஷனராக உதயகுமார் நியமனம்..!

கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சரவணக்குமார். இவர் தற்போது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய உதயகுமார் பதவி உயர்வு பெற்று கோவை தெற்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.