கோவை ராமநாதபுரம் சந்திப்பில் ” யூ டர்ன் ” பொதுமக்கள் மகிழ்ச்சி.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,வாகன ஓட்டிகள் சிக்னல் களில் காத்திருப்பதை தடுக்கவும் கடந்த 20 23 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் யூடர்ன் முறை மற்றும் ரவுண்டானா முறை கொண்டுவரப்பட்டது. கோவை திருச்சி சாலையில் ராமநாதபுரம் சந்திப்பு -நஞ்சுண்டாபுரம் பிரிவு ரோடு கோவை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. அரசு மருத்துவமனை சாலையில் இருந்து வருபவர்களும், லட்சுமி மில் சிக்னல் வழியாக வருபவர்களும் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.இதனால் ஏராளமான வாகனங்கள் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. ஆனால் அந்த சந்திப்பு சாலையில் ” யூடர்ன் ” வரை அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் அங்கு சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து செல்ல வேண்டிய நிலை இருந்தது .இந்த நிலையில் தற்போது அங்கு ” யூ டர்ன் ” முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது .இதனால் அங்குள்ள சிக்னலில் செயல்பாடு நிறுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெற்றி பெரும் பட்சத்தில் சிக்னல் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு “யூ டர்ன”முறையை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.