கோவை தொண்டாமுத்தூர் ரோடு, பாரதி நகரில்உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் 43 வயது ,51 வயது பெண்கள். இவர்கள் கோயம்புத்தூர் “சைக்கிளிங் கிளப் ” உறுப்பினர்களாக உள்ளனர். 2 பேர் அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சைக்கிளிங் பயிற்சி செய்த போது அவர்களை மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்தார். திடீரென்று அவர்களை வழி மறித்து அந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து சென்ற பிறகு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே சைக் கிளில் சென்று கொண்டிருந்தனர. மீண்டும் அங்கு வந்த அந்த வாலிபர் அதேபோன்று அந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பி சென்றுவிட்டார் பாதிக்கப்பட்ட 2பெண்களும் வெரைட்டி ஹால்ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவிநாசி ரோட்டில் பொருத்தப்பட்ட ஏ .என். பி .ஆர் . கேமரா (தான் இயங்கி நம்பர் பிளேட் பதிவு) உதவியுடன் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் உரிமையாளரின் செல்போன்எண்ணை சேகரித்து அந்த வாலிபரின் நடமாட்டத்தை போலீசார் கண் காணித்து மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அவர்ஆவாரம்பாளையம், வைகை நகரை சேர்ந்தபாலசுப்பிரமணியன் மகன் கவின் (வயது 25 )என்பது தெரியவந்தது. இவர் எம்பிஏ பட்டதாரி ஆவார். தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு வேகமாக செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் கவினுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0