கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி,போயர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 51) வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்புசப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் தீபாவளிபண்டிகையான நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோட்டூர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே சென்றபோது இவரது இருசக்கர வாகனமும், எதிர் திசையில் மற்றொருவர் ஓட்டி வந்து இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணவேணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ஒட்டி வந்த அங்கலக்குறிச்சி சேர்ந்த பெயிண்டர் சிவகுமார் ( வயது 21) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது .இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிருஷ்ணவேணி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ்ணவேணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து கிருஷ்ணவேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. விபத்தில் காயமடைந்த சிவக்குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார் .இந்த விபத்து குறித்து கோட்டூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவர் 1997 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். விபத்தில் பலியான பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின்உடலுக்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும், பொதுமக்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல்போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவரதுமறைவுக்கு அனுதாபம் தெரிவித்தும், அவரது குடும்பத்துக்கு ரூ 25 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதலமைச்சர்மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0