கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள 10 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை சுமார் 4.20.மணியளவில் 20 தொழிலாளர்கள் தேயிலைஇலை பறித்து கொண்டிருந்த போது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியே வந்த இரண்டு காட்டு யானைகள் தொழிலாளர்கள் அருகே வந்து பிளிறி அச்சுறுத்தியுள்ளது இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் மேற்பார்வையாளர் தாஸ்குட்டியின் ஆலோசனைக்கு இணங்க அப்பகுதியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஓடியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நிரந்தர தொழிலாளர்களான துரையன் என்பவரின் மனைவி ராணி வயது 47 மற்றும் பன்னீர் செல்வம் என்பவரின் மனைவி சித்ராதேவி வயது 34 ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த நிர்வாகத்தினர் எஸ்டேட் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகருமலை குரூப் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு. அங்கு தொழிலாளர்கள் இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அறிந்த வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்த தொழிலாளர் களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0