சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1 1/2 வயது பெண் குழந்தையை திருடிய இரண்டு பேர் கைது

சென்னை மூர் மார்க்கெட் கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே சஞ்சனா மண்டல் வயது 23 கணவன் பெயர் சுஜித் மண்டல் பர்தமான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பக்கத்தில் 1 வயது 8 மாதம் உடைய துர்கா என்ற பெண் குழந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்று விட்டதாக சென்ட்ரல் ரயில் நிலைய போலீசில் அழுது கொண்டே புகார் அளித்தார். அதன் பேரில் தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா அதிரடி உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் போலீஸ் சூப்பிரண்டு அன்பு சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் காணாமல் போன குழந்தை எங்கே இருக்கும் என தேடி வந்தனர் காணாமல் போன குழந்தை எண்ணூர் காவல் நிலையத்தில் இருப்பதாக போலீஸ் படையுடன் சென்று எண்ணூர் காவல் நிலையத்திற்கு பரபரப்புடன் சென்றனர் அங்கு பார்க்கும்போது குழந்தை துர்கா அழுது கொண்டே இருந்தது இந்தக் குழந்தையை திருடி வந்தது செல்வம் வயது 40 தகப்பனார் பெயர் முத்துசாமி கன்னி கோயில் தெரு திருவெற்றியூர் சென்னை மற்றும் கார்த்திக் வயது 28 தகப்பனார் முத்து 3 வது தெரு ராஜாஜி நகர் சாத்தங்காடு சென்னை ஆகியோர் குழந்தையை திருடியது தெரிய வந்தது இதன் பேரில எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார் அதன் பெயரில் போலீசார் போலீஸ் டிஎஸ்பி கர்ணன் மேற்பார்வையில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் மீட்கப்பட்ட குழந்தை துர்காவை அவளது தாயிடம் ஒப்படைத்தபின் ஏடிஜிபி வனிதா குழந்தையை பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். துர்காவின் தாய் ஏடிஜிபி வனிதாவை பார்த்து கை கூப்பி எனது குழந்தையை கண்டுபிடித்து ஒப்படைத்து விட்டீர்கள் கல்கத்தாவின் காளி உங்களுக்கு அருள் புரிவாள் என கண்ணீர் மல்க கை எடுத்து கும்பிட்டுக்கொண்டார்.