கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை. முதியவர் கைது.

கோவையை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 60 )கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் உள்ள டி,வி. செயல்படவில்லை. இதனால் அவர் தனது உறவினரின் மகளான கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். ராமசாமி உறவினர் என்பதால் அந்த மாணவியும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ராமசாமி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி ராமசாமியை தள்ளிவிட்டு வெளியே சென்று விட்டார். இது குறித்து மாணவி தனது தோழி மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்..இது பற்றி அவர்கள் ராமசாமி கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராமசாமியை சர மாரியாக தாக்கி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது பாலியல் தொடர்பான வழக்கு என்பதால் ராமசாமியை சரவணம் பட்டி போலீசார் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். கல்லூரி மாணவி க்கு பாலியில் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..