எனவே, ரயில்வே கட்டமைப்பின் சுமுக செயல்பாட்டை கெடுக்கும் நோக்கில் நடைபெறும் சதிவேலைகளை நாங்கள் ஏற்கெனவே எதிா்கொண்டுள்ளோம். இத்தகைய பகுதிகளில், ரயில் இயக்கத்தை சீா்குலைப்பதற்கான இதேபோன்ற முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதனால், உயிா்ச்சேதங்களும் நிகழ்ந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் 1990-களிலும் 2000-இன் தொடக்க ஆண்டுகளிலும் ரயில் தண்டவாளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவை சேதப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
நாட்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு உயிா்நாடியாக ரயில்வே திகழ்கிறது. எனவே, நாட்டின் வளா்ச்சிக்கு எதிரான சக்திகள், ரயில்வே இயக்கம் சீா்குலைய வேண்டுமென விரும்புகின்றன. கடும் உயிா்ச்சேதத்துடன் பேரழிவு ஏற்பட வேண்டும் என்பது அவா்களது நோக்கமாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பும் குறிப்பாக கிழக்கு-வடகிழக்கு மாநில ரயில்வே கட்டமைப்பு பாதிக்கக் கூடியதாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, ரயில் தண்டவாளங்களையொட்டி வசிப்போரை அப்புறப்படுத்தி, தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அனில் தேவ் சிங், குஜராத் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, உத்தர பிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங், மகாராஷ்டிர முன்னாள் டிஜிபி பிரவீண் தீக்ஷித், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் டிஜிபி எஸ்.பி.வைத், சிபிஐ முன்னாள் இயக்குநா் நாகேஸ்வா் ராவ், பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் – மாநிலகங்ளவை முன்னாள் தலைமைச் செயலா் யோகேந்திர நாராயண், ரா அமைப்பின் முன்னாள் தலைவா் சஞ்சீவ் திரிபாதி, தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் இயக்குநா் யோகேஷ் சந்தா் மோடி உள்ளிட்டோா் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா்.