சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது மேற்கண்ட உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு காவல் நிலையங்களில் திறன் மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு தரவரிசை படுத்தி குடியரசு தினத்தன்று அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற 1.மதுரை மாநகர் எஸ் எஸ் காலனி காவல் நிலையம் 2.நாமக்கல் மாவட்டம் நாமக்கல் காவல் நிலையம் 3. திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் நிலையம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோப்பைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாவட்டம் மாநகரங்கள் தோறும் காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட மாநகர அளவில் முதலிடம் பிடிக்கும் காவல் நிலையங்களுக்கு கோப்பைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் அவர்களால் நேற்று 22.7.2024 வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 1. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் 2. திருவண்ணாமலை மாவட்டம் திரு அண்ணாமலை காவல் நிலையம் 3. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் 4. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காவல் நிலையம் 5. வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையம் 6. கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் காவல் நிலையம் 7. விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் 8. செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகர காவல் நிலையம் 9.காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையம்10.கள்ளக்குறிச்சி மாவட்டம் எலாவனசூர் கோட்டை காவல் நிலையங்கள் முதலிடம் பெற்று கோப்பைகள் பெற்றுக் கொண்டனர் இதில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையம் தொடர்ந்து மூன்று முறை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து கோவை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0