திருச்சி யுஎஸ்ஐபி மனித உரிமைகள் அமைப்பினர் பஸ் நிழற்குடை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருச்சி USIP அணியின் சிறுகமனி பேரூராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகர் பள்ளி வாசல் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கான மனுவினை பொதுமக்களிடம் இருந்து கையொப்பம் பெற்ற அசல் பிரதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்களின் குறை தீர்ப்பு நாளில் நிழற்குடை அமைப் பதற்கான விண்ணப்பம் வேண்டி பெறப்பட்ட பதிவினையும் பொதுமக்களின் கையொப்பம். இடப்பட்ட பதிவினையும் மனுவாக தொகுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமது USIP மனித உரிமைகள் அணியில் உள்ள திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த திரு S. சேகர் முன்னிலையிலும் மற்ற உறுப்பினர்களான KK நகர் அன்சர்சரீப், பீம நகர் அலாவுதின், ஏர்போர்ட் பகுதி ராஜா, சிறுகமனியைச் சேர்ந்த இப்பகுதியில் நிழற்குடை அமைப்பதற்கு வேண்டி குறையாக நமது அணியினர் தெரிவித்த A. கண்ணன், S. விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் ஆதரவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக 30/09/2024 திங்கட்கிழமை மனுவாக அளிக்கப்பட்டு அதற்கு உண்டான ஒப்புதல் ரசிது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கும் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அவர்களுக்கும் மற்றும் சிறுகமனி பேரூராட்சி அலுவலகத்திற்கும் தனித்தனி மனுவாக பதிவுத் தாபல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு உண்டான ரசிதும் பெறப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள், வீடி யோக்கள், அரசாங்க ஒப்புகைக்கான ரசிதுகள் அனைத்தும் இவ்வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.