திருச்சி டிரேட் சென்டர் (TTC) தமிழக அரசின் உதவியோடு விரைவில் தொடங்கும் (MMM) முருகானந்தம் பேட்டி

திருச்சியில் புதியதொரு அடையாளமாக திருச்சி டிரேட் சென்டர் தமிழக அரசின் உதவி யோடு தொழில் முனைவோர்கள் கூட்டு முயற்சியில் கட்டப்பட இருக்கிறது என திருச்சி டிரேட்சென்டரின் புதிய நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
திருச்சியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக திருச்சி டிரேட் சென்டர் அமையும் எனவும் கூறினர். இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாக தலைவராக எம். முருகானந்தம் மற்றும் துணைத் தலைவராக அன்பு,திட்ட இயக்குனராக ராஜப்பா, நிதி இயக்குனராக இளங்கோ,வணிக இயக்குனராக ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் இயக்குனர்களாக கோபாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், செல்வன், புகழேந்தி, தேவராஜ், மணிகண்டன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த திருச்சி டிரேட் சென்டர் கோவை கொடிசியாவை போல் மிக சிறப்பாக அமையும் எனவும் இது திருச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் தொழில்துறை மேலும் விரிவடையும் எனவும் செய்தியாளர்களிடம் அவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.