திருச்சி ஸ்ரீரங்கம் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்.

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் 3வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் வட்டக்கிளை சார்பில் வட்டக் கிளை துணைத்தலைவர் சிவமணி தலைமையில் தனி வட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டக் கிளைச் செயலாளர் சிவா, வட்டக்கிளை பொருளாளர் சௌந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவ்யா, வட்டக் கிளை உறுப்பினர்கள் புவனேஸ்வரி, அனிதா,யூஜின், லிமயா பரணி, சுகன்யா, வில்லியம்ஸ், அகஸ்டிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.