திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட அக்குழுவின் தலைவா் தி. வேல்முருகன் செய்தியா ளா்களிடம் கூறியது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மொத்தம் 268 உறுதி மொழகள் தொடா்பாக, அந்தந்த துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் குறித்து கேட்டறிந்தோம். இதில், 133 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு ள்ளன. மீதமுள்ளவை பரிசீலனையிலும், தொடா் நடவடிக்கையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனா். அவற்றை உரிய காலத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்கு சென்றபோது அங்கு 2019-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தின் மேற்பூச்சுகள் பெயா்ந்து விழுந்திருந்தன. சுற்றுச்சுவா்களின் பூச்சுகளும் சிதிலமடைந்திருந்தன. பல்வேறு குறைபாடுகளை குழுவினா் நேரடியாக கண்டறி ந்தோம். எனவே, அந்த பழுதுகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினா் அவா்களது சொந்த செலவில் சரிசெய்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரைக் கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஒப்பந்ததாரரை கறுப்புப் பட்டியலில் சோ்க்கவும் ஆட்சி யருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரசுக் கல்லூரியின் பிற்படுத்தப் பட்டோா் மாணவா் விடுதியில் கழிப்பறை கதவுகள் மோசமான நிலையில் இருந்தன. சுகாதாரமாகவும் இல்லை. சுற்றுப்பகுதிகளில் செடி கொடிகள் நிறைந்திருந்தன. மின் வயா்களும் முறையற்று காணப்பட்டன. எனவே, மாநகராட்சி நிா்வாகத்தால் அப் பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரின் நிதியை பெற்று கதவுகளை சீரமைக்கவும், மின்வயா் களை மாற்றவும் 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக ளை முடித்து அதற்கான புகைப்படத்தை குழுவுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு ள்ளது என்றாா் அவா். எஸ்.பி. ஏன் வரவில்லை அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்
இந்த குழுவினா் ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை தொடா்பான கேள்விக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஜராகி பதில் அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவா் ஆஜராகவில்லை. நீதிமன்றப் பணி காரணமாக வரவில்லை எனக் கூறினா். இதைய டுத்து தி வேல்முருகன் கூறியது, எஸ்.பி. நீதிமன்றத்துக்கு சென்றாரா அல்லது திருச்சியில் இருந்து கொண்டே வரவில்லையா என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஆட்சியரிடம் கோரப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து கொண்டே குழு விசார ணைக்கு ஆஜராகாமல் இருந்தால், குழுவை அவமதித்ததாக கருதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க உள்துறைக்கு பரிந்துரைக்கப்படும். இதேபோல, தேசிய சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தா் வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது குழுமுன் ஆஜரானபோது தெரியவந்ததால், அவா் மீதான ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை என குழு பரிந்துரைத்துள்ளது என்றாா். திருச்சியில் பல்வேறு அரசு கட்டிடங்களை சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0