மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர். தயார் நிலையில் உள்ளனர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகுகள் கயிறு மிதவை உயிர் ஜாக்கெட் காப்பான் ஆகியவை தயார் நிலையில் உள்ளன குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் உடனடியாக நீரை அகற்ற மின் மோட்டார் மற்றும் மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற ரம்பம் பொருந்திய எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என் நிலையில் முக்கொம்பு மேலனைப் பகுதியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் மேலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நீராடுவதற்கு வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0