திருச்சி காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் ஹம்சா மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது திருச்சியில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் உளவியல் மருத்துவர்கள் பேச்சு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வுடன் தொடர்புடைய சிறப்பு நிபுணர்கள் என்று பல வகை சேவை வழங்குகின்றவர்களும் ஒரே இடத்தில் சேவை வழங்க இருக்கிறார்கள் அனைத்து சாதனங்களும் வசதிகளும் மையத்தில் நிறுவப்பட்டுள்ளன உள்நோயாளி வெளி நோயாளி வீட்டிலேயே சிகிச்சை மற்றும் பகல் நேர டேக்கர் சேவைகள் ஆகியவற்றை மையம் வழங்கி வருகின்றன அத்துடன் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் குழந்தைகளுக்கான மறுவாழ்வு சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன இதன் தொடக்க விழாவில் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் ஹம்சா மறுவாழ்வு மையத்தின் பங்குதாரருமான டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் கூறும்போது காவேரி மருத்துவமனை 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக உயர்தர சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது பெரும்பாலான மருத்துவமனைகளில் இடம்பெறாத ஒரு சுகாதார சிகிச்சை பிரிவாக மறுவாழ்வு சேவை இருக்கிறது கட்டுப்படியாக கூடிய மிதமான கட்டணத்தில் உயர்தர மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ஒரு விரிவான மற்றும் பிரத்தியேக மையமாக அம்சா இயங்கி வருகிறது என்றார். ஹம்சா மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி பாலமுரளி கூறும்போது தமிழகத்தின் மையமாக திகழும் திருச்சியில் உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் ஒரு முழுமையான விரிவான மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் திருச்சியில் உள்ள அனைவரும் இந்த மறுவாழ்வு மையத்துக்கு சென்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.