திருச்சி கேர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாண்டு பட்டமளிப்பு விழா இனிதே நடைப்பெற்றது, இதில் கல்லூரியின் சிறப்பு விருந்தினராக கிராமலயா தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனர் பத்ம ஶ்ரீ. தாமோதரன் கலந்து கொண்டார். மாணவர்களிடையே பத்மஸ்ரீ தாமோதரன் பேசும் போது மாணவர்களுக்கு ஒற்றுமை மற்றும் அவர்களுக்கான குறிக்கோளை அடைய இன்றைய நாளில் இந்த நிமிடத்தில் இருந்து பயணத்தை தொடங்குமாறு எடுத்துக் கூறினார். கேர் கல்வி குழுமத்தின், தலைமை நிர்வாக அதிகாரி பி. பிரதிவ் சந்த் விழாவை துவங்கி வைத்தார். கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் மாணவர்களுக்கான உறுதிமொழி மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கான அறிக்கையை வாசித்தார். மேலும் சிறப்பு விருந்தினர் தாமோதரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். குறிப்பாக பி.எஸ்சி இன்டீரியர் டிசைன் பாட பிரிவில் ஒன்று முதல் ஐந்து இடங்களையும் மேலும் பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் பாட பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் பெற்ற மாணவர்களுக்கு தர சான்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஏராளமான மாணவ மாணவிகள் தங்கள் பெற் றோருடன் வந்து பட்டங்களை பெற்றுச் சென்றனர்.