திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் திடீர் சாலை மறியல் நடைபெற்றது இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது
இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லை சுரேஷ் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் பிவி வெங்கட் துணைத் தலைவர் பிரபு துணைத் தலைவர்
சசிகுமார் மற்றும் வழக்கறிஞர் ஜேக்பன்னீர்செல்வம் வழக்கறிஞர் மதியழகன் மற்றும் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் வழக்கறிஞர் அருண் சித்தார்த்
வழக்கறிஞர் பொன் முருகேசன் வழக்கறிஞர் பிரியா நித்யா எழிலரசி மற்றும் சுந்தர் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வழக்கறிஞர் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது சட்ட ஒழுங்கு சந்தித்திருக்கிறது மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ள மறுக்கிறது பொது மக்களின் உரிமைக்காக போராடக்கூடிய வழக்கறிஞர்களுக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை நினைத்துப் பாருங்கள் மிகவும் பயமாக இருக்கிறது சட்ட ஒழுங்கு சீர்கெட்டு நடப்பது. இதுபோல செங்கல்பட்டிலும் வீட்டிற்குள் புகுந்து ஒரு வழக்கறிஞரை சரமாரியாக தாக்கி இருக்கின்றார் ஒரு கும்பல் அதனையும் யாரும் கண்டு கொள்ளவில்லை அதேபோல பகஜம் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு வழக்கறிஞர் தான் அவரின் படுகொலைக்கும் இன்று வரை பதில் தெரியவில்லை
இதுபோல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இனிவரும் காலங்களில் வழக்கறிஞர்களுக்கு தன் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0