திருச்சி கே கே நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது காலையில் மாணவ மாணவர்களுக்கான கூட்டு உடற்பயிற்சியும் அணி வகுப்பும் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது காலை நிகழ்வில் திரு முத்துசாமி இண்டர்நேஷனல் அத்தலடிக்ஸ் சதன் ரயில்வே அவர்கள் விழாவினை கொடியேற்றி துவக்கி வைத்தனர் பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி சிறப்பித்தார் திரு மதியழகன் தாயனூர் தலைமை ஆசிரியர் அவர்கள் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றவர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரு அழகிரிசாமி ,திலகநாதன் ஆகியோர்கள் ஏற்றுக்கொண்டனர் பின்னர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது மதியம் சரியாக 3:00 மணி அளவில் பள்ளி ஆண்டு விழா இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் முகமது பாரூக் அவர்களும் உதவி திட்ட அலுவலர் அன்பு சேகர் அவர்களும் வருகை தந்தனர் இவ்விழாவின் சிறப்பு வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் போ அன்பரசன் சமுத்திரம் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராஜசேகரன் ,மேலவளவு பட்டதாரி ஆசிரியர் அருணகிரிநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர், விழாவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி பரிசு, கலை நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் மாநில அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன விழாவினை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருந அழகு சுப்பிரமணியன் அவர்களும் இப்பள்ளி அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பள்ளி பெற்றோர்களும் ஏற்பாடு செய்தனர் இறுதியாக பள்ளியின் பட்டதரி ஆங்கில ஆசிரியர் சரவணன் அவர்கள் நன்றியுரை கூறினர் வரவேற்புரையாக திரு செல்வம் பட்டதாரி ஆசிரியர்கள் வரவேற்றார் ஆண்டறிக்கை வாசித்து சிறப்பித்தார் ஏ சங்கீதா உதவி தலைமை ஆசிரியர் அவர்கள் இவ்விழாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசுகள் வழங்கப்படும் என தலைமையாசிரியர் தெரிவித்தார். இந்த அறிவிப்பானது மாணவர்கள் மத்தியில் தேர்வில் வெற்றி பெற முதலாவது இடத்தையும் இரண்டாவது இடத்தை மூன்றாவது இடத்தையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்த தலைமையாசிரியர் அவர்கள் போற்றுதலுக்குரியவர்