கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறும் அரசாங்க பொருட்காட்சியை கண்டு ரசித்த பழங்குடி மக்கள்
தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகளை பழங்குடிகள் அறியும் விதமாக அமைந்த பொருட்காட்சி
இயற்கையின் அரவணைப்பில் மலையோடும் மழையோடும் நகர்புற சாயத்தை கலக்காமல் வாழ்ந்துவருபவர்கள் மலைவாழ் பழங்குடியினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், மட்டுமின்றி நகர்புற கேளிக்கைகளை பற்றியும் பெருமளாவில் அறிந்திராத இம்மக்களை வெளியில் கொண்டுவந்து உற்ச்சாகத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் கோயமுத்தூர் மாவட்ட நிர்வாகத்தினர்.
மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் அடிப்படையில் வெள்ளியக்காடு, பில்லூர் மலைவாழ் பகுதி பழங்குடிகளை வடக்கு வட்டாட்சியர் பூமா தலைமையில் அரசாங்க பொருட்காட்சிக்கு அழைத்து வந்து சுற்றி காண்பித்திருக்கின்றனர்.
நான்கு பேருந்தில் அழைத்துவரப்பட்ட 110 பழங்குடிகள் பொருட்காட்சியை கண்டு ரசித்திருக்கின்றனர். அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகளை கண்டு அறிந்த பழங்குடிகள் கேளிக்கை நிகழ்சிகளிலும் கண்டு ரசித்தனர்.
ராட்டினம் சுற்றுவது முதல் அனைத்து கேளிக்கைகளிலும் பொழுதினை ஆனந்தமாக கழித்தனர். ராட்டினத்துக்கான கட்டனம் வசூலிக்காமல் இலவசமாகவும் பொருட்காட்சியில் சோழா அப்பளம் பஞ்சு மிட்டாயும் கடை உரிமையாளர்கள் இலவசமாக தந்திருக்கின்றனர்.
மலைகளிலும் மலை கிராமங்களிலும் வாழும் பழங்குடிகள் வாழ்க்கையில் அரிதாகவே இது போன்ற நிகழ்வில் பங்கெடுப்பதனால் அவர்களுக்கு இலவசமாகவே உணவு தந்தும் ராட்டனத்துக்கு கட்டனம் வசூலிக்கப்பட்டமலும் அரசாங்கம் பொருங்காசியகம் உபசரித்திருக்கின்றனர்.
மலைவாழ் பலங்குடியினர் வரும் நாட்களில் அதிகம் வரவழைத்து பொருட்காட்சியை கண்டுகளிக்க மாவட்ட நிர்வாகம் முறையான ஏற்ப்பாடுகளை செய்யவிருக்கின்றது