குப்பைத் தொட்டிகளில் நிரம்பி வழியும் குப்பைகள்.. பொதுமக்கள் சாலையில் போடும் அவல நிலை-பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றுமா..?

தருமபுரி அடுத்து  இலக்கியம்பட்டியில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பியதால் பொதுமக்கள் குப்பைகளை கீழே போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகளை பொதுமக்கள் தூக்கி வீசுவதாலும், காற்றின் மூலம் அடித்து சென்று குப்பைகள் பக்கத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுவதாலும் சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் தேங்கும் நிலை ஏற்பட உள்ளது. இது மட்டுமில்லாமல் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளினால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது காற்றின் மூலம் பறந்து குப்பைகள் அவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. தினமும் குப்பை தொட்டிகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் வாகனங்களின் மீது குப்பைகள் விழுந்து விபத்துக்கள் ஏற்படும் முன்னே தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.