கோவை மாநகர போலீஸ் கமிஷனர்-துணை கமிஷனர்கள் இடமாற்றம். புதிய கமிஷனராக சரவண சுந்தர் நியமனம்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.இதற்காக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இடமா ற்றம் செய்யப்பட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் ஐ.ஜி.யாக நியமிக் கப்பட்டுள்ளார் .அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வரும் சரவண சுந்தர் ஐ.ஜி.யாக பதவிஉயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார். அதுபோன்று கோவை மாநகர வடக்கு துணை கமிஷனராக பணியாற்றி வரும் ஸ்டாலின் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப் பட்டுள்ளார் .அவருக்கு பதிலாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் போலீஸ் சூப்பிரண்  டாக பணியாற்றி வரும் தேவநாதன் கோவை மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமி க்கப்பட்டுள்ளார். கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் சரவணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை தெற்கு மண்டல பொருளாதாரகுற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார் .இது தவிர தமிழகத்தில் மொத்தம் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.