போலீஸ் அதிகாரி மீது தாக்குதல். 4 பேர் கைது

கோவை கணபதி மாநகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன் ( வயது 58) நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கோவை மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் .இவரது மூத்த மகளும் ,ஊட்டி கோத்தகிரி சேர்ந்த விஜயகுமார் (வயது 29)என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் . விஜயகுமார் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இது அவரது மனைவிக்கு தெரிய வந்தது ,இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயகுமார் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து கொடுமை படுத்தினாராம் இதை தட்டி கேட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனை விஜயகுமார் அவரது உறவினர்கள்தீபன் ( வயது 26) கணேஷ் வயது 22)கார்த்திக் ( வயது 32)ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து ஈஸ்வரன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விஜயகுமார், தீபன் கணேஷ் ,கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.