கோவையில் ஒரு வழி பாதையில் அத்துமீறி வந்த அரசு பஸ்சால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் அவதி.

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் நேற்று ஒண்டிபுதூர் டிப்போவை சேர்ந்த அரசு டவுன் பஸ் (எஸ்11 ) பேருந்து, சிறிது நேரம் காத்திருக்க முடியாமல், ஒரு வழி சாலையில் நுழைந்தது. இதனால் அந்த சாலையில், எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு பேருந்தின் ஓட்டுனரோ எந்த தவறும் செய்யா தவர் மாதிரி சொகுசு பேருந்தில் சொகுசாக அமர்த்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத் தினார். அரசு பேருந்து என்பதால் இப்படி விதிமீறல்களில் ஈடுபடலாமா ?என வாகன ஒட்டிகளும்,பொதுமக்களும்கேள்வி எழுப்பினார்கள் இந்தநிலையில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இது குறித்து அருகில் உள்ளவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈட்பட்ட னர் . அரசு பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனரின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது.