கேரளா லாட்டரி விற்ற வியாபாரி சிறையில் அடைப்பு.

கோவை அருகே உள்ள சின்ன தடாகம் வீரபாண்டி ரோட்டை சேர்ந்தவர்பிரபாகர் ( வயது 49)இவர் காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்தாராம்.அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு ஆகியோர் பிரபாகரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 451 கேரள மாநில டிக்கெட்டுகளும் ஒரு செல்போன் ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.