கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், அம்மையப்பர் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் . இவரது மகன் செல்வகணேஷ் ( வயது 19) இவர் தனது அண்ணன் சிவபாலனுடன் சேர்ந்து மளிகை கடையைகவனித்து வந்தார்.. இவரது அக்காவுக்குநேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது இதில் கலந்து கொள்ள குடும்பத்தினர் அனைவரும் சென்று விட்டனர். செல்வகணேஷ் மட்டும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வீட்டில் தனியாக இருந்தார். இவரது அண்ணன் சிவபாலன் வந்து பார்த்தபோதுவீட்டின் முதல் மாடியில் செல்வகணேஷ் சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0