சூலூர் பகுதியில் 100 கிலோ குட்காவுடன் வியாபாரி கைது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில்சூலூர் காவல் நிலைய போலீசார் சூலூர் “போட் ஹவுஸ் பார்க் ” அருகேநேற்று திடீர் சோதனைநடத்தினார்கள். அப் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த இருகூர் பகுதி சேர்ந்த வியாபாரிஇரையா மகன் ஜெயக்குமார் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்…