பெண்ணைப் பற்றி முகநூலில் அவதூறாக பதிவிட்ட வியாபாரி கைது.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி. (வயது 35) இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது தாயார் பற்றி தவறாக சித்தரித்து முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதை யடுத்து முகநூலில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம், சடையனேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சிவபெருமாள் (வயது 33)என்பவரை இன்று கைது செய்தார். இவர் தற்போது திருவள்ளூர், அக்ரஹாரம் வீதியில் வசித்து வருகிறார்.கவரிங் நகை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,தகவல் தொழில்நுட்ப சட்டம்,,உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..