கோவை மே 14 பாண்டிச்சேரி பாகூரை சேர்ந்தவர் தசரதன்.இவரது மகன் ஆகாஷ் (வயது 22) இவர் தனது உறவினர்களுடன்மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள வெள்ளிபாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.. பின்னர் அங்குள்ள பவானி ஆற்றில்உறவினர்களுடன் குளித்தார். அப்போதுதிடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார்.இது குறித்து அவரது தந்தை தசரதன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0