கோவைமாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இன்று இரவு முதல் நாளை வரை கோவையில் 35 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 23 நான்கு சக்கர வாகனங்களி லும்,60 இருசக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.. 7 பஸ் நிலையங்கள், 6 ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்படுவார் கள். 6 அதிவிரைவுப் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இன்று இரவு அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும்.உதவிக்காக ஆம்புலன்ஸ் பல்வேறு இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விடுதிகளில், ஓட்டல்களில் ஆபாச நடனங்கள் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது..84 கிறிஸ்தவ ஆலயங்கள் 16 கோவில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 4துணை கமிஷனர்கள், ஒரு கூடுதல் துணை கமிஷனர். 5 உதவி கமிஷனர்கள் ,44 இன்ஸ்பெக்டர்கள், 232 சப்- இன்ஸ்பெக்டர்கள் ,150 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட மொத்தம் 1600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல பெண்களிடம் கேலி – கிண்டலில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள். விபத்து இல்லாத புத்தாண்டை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0