கோவை டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று ( வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .அதுபோன்று கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார், சுஹாசினி, அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில்1300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதே போன்று புறநகர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் வாகன சோதனை நேற்று இரவு முதல் பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச் சாவடிகளும் போலீ சார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் பலத்த சோதனை செய்த பிறகு அனுமதிக்கிறார்கள். அத்துடன் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணி ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் “மெட்டல் டிடைக்டர் ” கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.. அதுபோன்று ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளின் உடை மைகளும் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்க பட்டது. இது தவிரகோவில்கள் – மசூதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பஸ் நிலையங்கள் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..கோவை விமான நிலையத்துக்கு 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0