கோவை செட்டிபாளையம் பிரிவு, மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40)பேக்கரியில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனது நண்பர் லோகநாதன் மூலம் வெள்ளலூர் என்.ஜி.ஆர். சாந்தி (வயது 39) என்ற பெண் அறிமுகமானார். தனக்கு அரசியல் வட்டாரத்திலும், மாநகராட்சியிலும் உயர் அதிகாரிகள் தெரியும்..அவர்கள் மூலமாக பெரியசாமியின் மகளுக்கு கோவை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறினார் இதை நம்பிய பெரியசாமி அவரிடம் ரூ 2 லட்சம் கொடுத்தார். சிறிது நாட்கள் கழித்து வேலை வாய்ப்புக்கான உத்தரவு வந்தது.அதை மாநகராட்சியில் கொண்டு காட்டிய போது போலியான வேலை வாய்ப்பு ஆணைஎன்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெரியசாமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்சாந்தி மீது மோசடி உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் இதே போல உப்பிலிபாளையம் சீனிவாசன் நகர், சக்தி சரவணன் குமார் (வயது 30) என்பவரிடமும் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2லட்சத்து 50 ஆயிரம்வாங்கி இருந்தாராம்..கோவை உப்பிலிபாளையம், வரதராஜபுரம், தனபால்லே அவுட்டை சேர்ந்த லோகநாதன் (வயது 56) என்பவரிடம் கோவை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 1 லட்சத்து 60 ஆயிரம் வாங்கியதும் தெரியவந்தது. , மேலும் இவர்ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0