தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும்.
இந்த பண்டிகை டிசம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அதன் பிறகு திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவானது சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.
இந்த பண்டிகை வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் நிலையில், டிசம்பர் 6-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழாவாக மிகவும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவார்கள். இந்நிலையில் நடப்பாண்டில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கோவிலில் உள்ள 4 கோபுரங்களும் நன்றாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஒரு நாளைக்கு 30 லட்சம் பக்தர்கள் வருகை புரியுமாறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அதன் பிறகு குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் போன்றவைகளும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் வருவதற்கு வசதியாக 2000 பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கும் முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்பிறகு 60 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதோடு, 5 இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.