திருவள்ளூர், திருமழிசை பேரூராட்சி புதிய கட்டிடம் கட்ட ரூ 2 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அடுத்த ஆரணி. வளர்ந்துவிட்ட பெரிய ஊரான இப் பேரூராட்சி அலுவலகம் செயல்பட போதிய இட வசதி இல்லாததால் இந்நகருக்கு அலுவலகத்திற்கு பொதுமக்கள் வசதியாக வந்து செல்ல புத்தம் புதிய கட்டிடம் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் செலவில் கீழ்த்தளம் மற்றும் முதல் தளம் பிரம்மாண்டமான முறையில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டிடத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் அரங்கு செயல் அலுவலர் அறை அலுவலர்கள் அறை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குரலா நேரடி மேற்பார்வையில் தரமாகவும் விரைவாகவும் பொதுமக்கள் வியக்கும் படி மிக நேர்த்தியாக கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் மணல் கலவை சிமெண்ட் கலவை வி கித முறைப்படி நேர்த்தியாக கலந்து காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் உ. சரவணன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் நேரடி ஆலோசனையின் பேரில் இக்கட்டிடம் கட்டித் தரப்படும் என பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரின் அவ்வப்போது திடீர் வருகை தந்து கட்டிடத்தின் தரத்தை உறுதி செய்வார். இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி அலுவலக கட்டிடம் இட வசதி போதாததா ல் திருமழிசை பஸ் நிலையம் பின்புறம் ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் மிக நேர்த்தியாக பேரூராட்சி அலுவலகம் மக்கள் பாராட்டும்படியாக கட்டப்படும் என பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்தார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0