திருப்பூர் அமிர்த கடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா..!

திருப்பூர் மாவட்டம் தாயம்பாளையத்தில் உள்ள அபிராமி அம்மை ஸமேத அமிர்த கடேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை 6:30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடந்தது. சர்வசாதகம்.சிவகாம செல்வர் எஸ். எஸ் .சிவாஜல சுந்தர குருக்கள் சிவகாம சிரோன்மணி.பா. அருணசுந்தரசிவம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பின்னர் தசதானம், தச தரிசனம்,மஹா அபிஷேகம்,ராஜ அலங்காரம். உபசாரம்,மஹா தீபராதனை, பிரசாத வழங்குதல் ஆகியவை நடந்தது.முன்னதாக இன்று காலை 4 மணிக்கு மங்கள இசை, மண்டபார்ச்சனை, வேதிக்கார்ச்சனை |நாடி சந்தானம் . உபசாரம்,,மகாதீபாரதனை யாத்திரா தானம், நான்காம் கால யாக ஜால பூஜை நடந்தது.இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.