பெண்ணை நாற்காலியில் கட்டி போட்டு நகை. பணம் கொள்ளை.

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சொக்கநாச்சி (வயது 24 )நேற்று முன்தினம் முருகானந்தம் வேலைக்கு சென்று விட்டார் .சொக்கநாச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் அதைநோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரது வீட்டுக்குள் புகுந்தது..கத்தியை காட்டி மிரட்டி சொக்கநாச்சியை ஒரு நாற்காலியில் அமர வைத்து கையில் – கால்களை கட்டி போட்டனர் பின்னர் அவரிடம் நகை பணம் மற்றும் பீரோ சாவியை கேட்டு மிரட்டினர் .அதற்காக சாவி இல்லை என்று கூறினார் .இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீரோ சாவி தரவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார் ,இதனால் அவர் பயந்து போய் பீரோ சாவியை கொடுத்தார் அந்த 3 பேரும் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள்,ரூ 5 ஆயிரம்பணம் மற்றும் 3 செல்போன்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். அவைகளின் மொத்த மதிப்பு ரூ3 லட்சம் இருக்கும். மாலையில் வேலை முடிந்து கணவர் முருகானந்தம் வீட்டுக்கு வந்தார். அங்கு நாற்காலிகள் கை, கால் கட்டப்பட்ட நிலையில் மனைவி சொக்கநாச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் நடந்ததைக் கேட்டறிந்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.