திக்.. திக்.. காட்சி… அந்தரத்தில் பங்கி ஜம்பிங்… கயிறு அறுந்து நூலிழையில் உயிர் தப்பிய மைக்…

சாகசங்களுக்கு வயசு தடையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சாகசங்கள் தேவையாய் இருக்கிறது. சாசக ப்ரியர்கள் பயணங்களை விரும்புகிறார்கள்.

இப்படி சாகசங்களை விரும்பும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து நிறைய சாகச கேளிக்கைப் பூங்காங்களும் உருவாகி வருகின்றன. அப்படி சாகச விளையாட்டுக்களைத் தேடி உலகம் முழுவதும் உள்ள மக்கள் சுற்றுலா செல்லும் நாடுகளில் முக்கிய இடம் பிடிப்பது தாய்லாந்து தான். அங்கு இயற்கையின் அழகியல் சூழல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. அதே போல் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கும் அம்சங்களும் ஏராளமாக உள்ளன.

அந்த வகையில் அங்கு பங்கி ஜம்பிங்கில் தொங்கிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, திடீரென கயிறு அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த 39 வயதான மைக் என்பவர் தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள பட்டாயாவில் தங்கியிருந்தபோது, கேளிக்கை பூங்காவில் நண்பருடன் பங்கி ஜம்பிங் செய்ய முடிவு செய்தார்.

10 அடுக்கு ஜம்பிங்கில் நூலிழையில் உயிர் தப்பிய கதையை விவரித்து கூறியுள்ளார். மைக் டைவ் அடிக்கும் போது அடிப்பகுதியை அடைந்து கீழே குதிக்கும் நேரம் கயிறு முழுவதுமாக அறுந்து அவர் தண்ணீரில் விழுந்தார். தண்ணீரில் விழுந்ததால் மைக், காயங்களுடன் உயிர்தப்பினார்.

மேலும் குதிக்கும்போது அது மிகவும் உயரமாக இருந்ததால் நான் கண்களை மூடியதாகவும், கண்களைத் திறந்த போது தண்ணீரில் விழுந்துள்ளதையும் உணர்ந்ததாக மைக் மேலும் கூறினார்.

காயங்கள் மிகவும் தீவிரமாக இருந்ததாக தெரிவித்த மைக், தனது டைவிங் செலவையும் மருத்துவத்திற்கான எக்ஸ்ரே செலவும் கேளிக்கை பூங்கா ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.