கோவை சூலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மூன்று வேலை உணவு

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை தொடர்ந்து புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு தகுந்தது போல் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சைகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் 150 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் அவர்களோடு உடன் இருப்பவர் என அனை வருக்கும் மூன்று வேலை உணவு சேவை உணர்வோடு கூடிய தன் ஆர்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அந்நிகழ்வு 500 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிகழ்வை ஒருங்கி ணைத்து வரும் அரிமா த.மன்னவன், அரிமா சூ.வே. தருமராஜ், சூலூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர், அரிமா பசுமை நிழல் விஜயகுமார், அரிமா பழ.சிவகுமார் உள்ளிட்டோர் தினசரி உணவு வழங்கும் இன் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கின்ற அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரமுகர்களை அழைத்து தொடர்ந்து உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு உதவி கொண்டிருக்கின்றவர் களுக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்து இந்நிகழ்வினை இடை நில்லாது நடைபெற தன் ஆர்வலர் களை அதிகப்படுத்தவும், சூலூர் அரசு மருத்துவமனை தர வரிசை ப்பட்டியல் 187 -வது இடத்திலிருந்து 57வது இடத்திற்கு தரம் உயர்ந்ததை பாராட்டியும், முதலமைச்சர் விருது பெற்ற தலைமை மருத்துவர் கஜேந்திரனை பாராட்டியும், மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வாகவும் இவ்விழா நடைபெற்றது.